பைபிள் · Indian Revised Version (Tamil) 2019

சங்கீதங்கள் 122

1 யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.

2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.

3 எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.

4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.

5 அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

6 எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.

7 உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.

8 என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.

9 எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

Indian Revised Version (Tamil) 2019 — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0