பைபிள் · Indian Revised Version (Tamil) 2019

சங்கீதங்கள் 120

1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.

3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?

4 பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!

6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

Indian Revised Version (Tamil) 2019 — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0