பைபிள் · Indian Revised Version (Tamil) 2019
சங்கீதங்கள் 117
1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Indian Revised Version (Tamil) 2019 — © 2017, 2019 Bridge Connectivity Solutions — CC BY-SA 4.0